Global Money Wiki
Advertisement


இந்த பகுதியின் குறிக்கோள்:

இந்த பகுதியில் மாணவர்கள் காசோலை மற்றும் சேமிப்பு கணக்கு பற்றி கற்று கொள்வார்கள். அவர்கள் இந்த கணக்கு எவ்வாறு செயல் படுகிறது, இதை எவ்வாறு பயன் படுத்துவது என்பதை பற்றி கற்று கொள்வார்கள்.


இந்த பாடத்தின் முடிவில் உங்கள் மாணவர்களால்

  • காசோலை மற்றும் சேமிப்பு கணக்கிற்கான வேறுபாடுகளை விவரிக்க முடியும்.
  • காசோலை பதிவம் என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு சமம் செய்வது என்பதை விவரிக்க முடியும்.
  • வங்கி கணக்கு விவர அறிக்கையை எவ்வாறு படிப்பது என்று விவரிக்க முடியும்
  • வைப்புத் தொகை மற்றும் பணம் எடுக்க பயன் படுத்தும் தாள்களை பற்றி விவரிக்க முடியும்
  • அவர்களால் முழு எண்கள் மற்றும் நிலையான தசம எண்களை கூட்ட மற்றும் களிக்க முடியும் என்பதை விவரிக்க முடியும்.


தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள்:

பேலன்ஸ்

மாத இறுதியில் ஒருவருடைய கணக்கில் இருக்கும் தொகை. அத்தொகை வங்கி கணக்கு விவர அறிக்கையில் இருக்கும் தொகைக்கு நிகரானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதில் உள்ள பிரச்சனையை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.


காசோலை

ஒரு குறிப்பிட்ட மற்றும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட காகிதத்தில் வங்கிக்கு எழுதப்பட்ட பணம் கொடுப்பதற்கான உத்தரவு.


பாடம்: காசோலை மற்றும் சேமிப்பு

காசோலை புத்தகக்துடன் இதை தொடங்குங்கள். உங்கள் மாணவர்கள் இதை எப்போதாவது பார்த்து இருக்கிறார்களா என்பதை கேளுங்கள். காசோலை புத்தகத்தை பற்றி கலந்துரையாடுங்கள்.


கலந்துரையாடலின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் கரும்பலகையில் ஒரு வரைபடம் வரைக.. நடுவில் உள்ள வட்டத்தில் இருந்து தொடங்குங்கள் (காசோலை கணக்கு என்றால் என்ன?) சுற்றி இருக்கும் வட்டத்தில் நீங்கள் கலந்துரையாடும் பிற கருத்துகளையும், எண்ணங்களையும் எழுதுக.


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் இருக்குமாறு காசோலை புத்தகம் பற்றிய கலந்துரையாடலை கொண்டு செல்லுங்கள்:


  • இது எவ்வாறு அழைகப்படுகிறது?
  • காசோலைக்கான தொகை எங்கு இருந்து வருகிறது?

இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணங்களும் இருக்க வேண்டும்

1.காசோலை என்பது இலவச பணம் இல்லை

2.காசோலை, காசோலை கணக்குடன் தொடர்பு உடையது.

  • நீங்கள் காசோலை கணக்கு மூலம் வாங்கிய பொருட்களுக்கு காசோலை தவிர வேறு வழிகளில் பணம் செலுத்த முடியுமா?
  • காசோலை கணக்கு வைத்து கொள்வது ஏன் கெட்டிக்காரத்தனம்?

FDIC பற்றி விளக்குங்கள்

  • காசோலை கொண்டு நீங்கள் என்ன வாங்க முடியும்?
  • நீங்கள் காசோலை கொடுத்ததற்கு நிகரான பணம் உங்கள் வங்கி கணக்கில் இல்லை என்றால் என்ன ஆகும்?
  • மக்கள் எவ்வாறு அவர்களுடைய பணத்தை பற்றி காசோலை புத்தகத்தில் குறித்து வைப்பார்கள்?

மாத கணக்கு விவரம் / காசோலை பதிவம் / சமநிலை காசோலை புத்தகம்


இந்த கலந்துரையாடல் அனைத்தும் ஒரே முறை நடைபெறலாம் அல்லது கலந்துரையாடலை பகுதியாக்க நீங்கள் கையேடுகளை பயன் படுத்தலாம். நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கையேடுகளை பயன் படுத்துவீர்கள்.


நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கையேடுகளை பயன் படுத்துவீர்கள்:


  • இரண்டு வெற்று காசோலை கொண்ட கையேடு. மாணவர்கள் அவர்களுடைய சொந்த காசோலை செய்வதற்கு இதை பயன் படுத்துவார்கள். இது பயிற்றுவிப்பாளருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Pic 06

  • பூர்த்தி செய்ய வேண்டிய காசோலை பதிவங்கள் கொண்ட கையேடு

Pic 07

  • வங்கியில் காசோலை செலுத்துவதற்கான தாள்கள்

Pic 08

இந்த கையேட்டை பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு தேவையான உதவி புரியுங்கள். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காசோலைகள் எழுத வேண்டி இருந்தால் அதற்கு ஏற்றவாறு அதிக பிரதிகள் வைத்து கொள்ளுங்கள்.


மாணவர்கள் காசோலை மற்றும் காசோலை செலுத்துவதற்கான தாள்களை பூர்த்தி செய்வதை புரிந்து கொள்ளும் திறனை கொண்டு இதை ஆசிரியர் நடத்தும் பயிற்சி அல்லது மாணவர்கள் தனியாக செய்யும் பயிற்சி ஆகியவற்றில் ஒன்றை இந்த தாள்களை பூர்த்தி செய்ய பின் பற்றலாம். இந்த மூன்று கையேடுகளில் என்ன நிறைவு செய்ய வேண்டும் மற்றும் இதை நிறைவு செய்யும் பொழுது வாழ்வில் என்ன நடக்கும் என்பதை வலியுருத்துங்கள்.


குழு செயற்பாடு

முதல் மூன்று கையேடுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்த பின் மாணவர்களை ஐந்து குழுக்களாக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு குடும்பமாக பாவித்து கொண்டு அவர்களுடைய காசோலை புத்தக படிவத்தை சமம் செய்ய சொல்லுங்கள்.


மாணவர்களுக்கு ஒரு வெற்று காசோலை படிவ கையேடு மற்றும் கீழே கொடுகப்பட்டுல்ல குடும்ப பொருளாதார அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கொடுங்கள். காசோலை புத்தகத்தை சமன் செய்வதற்கு அட்டைகளில் கொடுக்கப்பட்டுள்ள பொருளாதார உண்மை சம்பவங்களை பயன் படுத்துமாறு மாணவர்களை வலியுறுத்துங்கள்.


பதில்கள் (குடும்ப பொருளாதார அட்டைகள் அடுத்த பக்கத்தில்)

பிரவுன் குடும்பம்: $200.00

கேரெட் குடும்பம்: $2200.00

டியேஸ் குடும்பம்: $1800.00

ஆன்டர்சன் குடும்பம்: $2220.00

லீ குடும்பம்: $1800.00


Pic 09

Geetha


பாடம்: ATM / பற்று அட்டை திருப்புதல் தேர்வு

காசோலை பிரிவின் இறுதி பாகத்தில் நீங்கள் ATM/பற்று அட்டை பற்றி கற்று தருவீர்கள்


உங்கள் மாணவர்களிடம் "பணம் அல்லது காசோலை பயன் படுத்தாமல், நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்கள் காசோலை கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியுமா" போன்ற கேள்விகளை கேட்டு இந்த பகுதியை தொடங்குங்கள்.


ஒருவரிடமும் இருந்து பதில் இல்லை என்றால், பற்று அட்டையை காட்டுங்கள். மாணவர்கள் இதை கடன் அட்டை என்று நினைத்து கொள்வார்கள், அவர்களிடம் இது கடன் அட்டை போன்று இருந்தாலும் /பற்று அட்டை என்று அழைக்கப்படும் மற்றும் காசோலையை பயன் படுத்துவது போலவே இதையும் பயன் படுத்தலாம் என்று விளக்குங்கள்.

Pic 010


கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள்

  • ATM /பற்று அட்டை எவ்வாறு பயன் படுத்தப்படுகிறது?
  • PIN எண் என்றால் என்ன? இது ஏன் மிகவும் முக்கியமானது?
  • நீங்கள் உங்கள் கணக்கை எவ்வாறு பயன் படுத்துவீர்கள்?
  • நீங்கள் எவ்வாறு ATMயை பயன் படுத்துவீர்கள்?



நீங்கள் இந்த பகுதியை முழுமையாக முடித்த பின், உங்கள் மாணவர்களிடம் அவர்கள் வேறு எதாவது வங்கி கணக்கு வைத்து இருக்கிறார்களா (சேமிப்பு கணக்கு) என்று கேளுங்கள். சில மாணவர்கள் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பார்கள். ஏதேனும் ஒரே மாணவர் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால் அவர்கள் எங்கு, எப்போது மற்றும் ஏன் அந்த கணக்கை தொடங்கினார்கள் என்று கேளுங்கள். அவர்கள் கணக்கில் இருக்கும் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் கேட்க கூடாது.


நீங்கள் கீழே கொடுத்து இருப்பவை போன்ற கேள்விகளை கேட்கலாம்

  • வங்கியில் பணி புரிபவர்கள் அருமையானவர்களா?
  • வங்கி கணக்கை தொடங்குவதற்கு உங்களுடன் வந்தவர் யார்?
  • வங்கி கணக்கு தொடங்குவது கடினமானதா?
  • சேமிப்பு கணக்கு வைத்து இருப்பது உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?


குறைந்த பணத்தை வைத்து வங்கி கணக்கு தொடங்கலாம் என்றும் வங்கியில் நாம் பணம் வைத்து இருப்பதற்காக, வங்கி நமக்கு வட்டி என்கிற பெயரில் சிறிய தொகை வழங்கும் என்பதையும் விளக்குங்கள். அப்படி என்றால் வங்கியில் பணம் வைத்து இருந்தால் அது வளரும்.


மாணவர்களை சேமிப்பு வைப்புத் தொகை தாளை பூர்த்தி செய்ய சொல்லுங்கள்.

Pic 011


கடைசியாக வகுப்பை விட்டு வருவதற்கு முன் மாணவர்களிடம் அவர்கள் இன்றைக்கு கற்று கொண்ட பாடத்தில் இருந்து ஏதேனும் ஒன்றை சொல்ல சொல்லுங்கள்.

Pic 012


காசோலைகள் Pic21


Pic21


காசோலை படிவங்கள் Pic 013 Pic 013 Pic 014

Pic 015

சேமிப்பு வைப்புத் தொகை தாள்கள்

Pic 015

Pic 015

Advertisement