FANDOM



அடித்தளத்தில் இருக்கும் சமூகத்தின் பொருளாதார வாய்ப்புகளை பொருளாதார கல்வி மூலமாக முன்னேற்றுவது ஆபரேஷன் ஹோப்பின் குறிக்கோள் ஆகும். குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒரு தனி மனிதருடைய வாழ்க்கையின் பொருளாதார தரத்தை, பங்குதாரர்களை உருவாக்கும் நிகழ்ச்சி மூலமாக ஆபரேஷன் ஹோப் முன்னேற்றுகிறது. காசோலை மாற்றும் வாடிக்கையாளர்களை வங்கியின் வாடிக்கையாளர்களாக மாற்றுவது, வாடகை வீட்டில் இருப்பவர்களை வீட்டின் உரிமையாளர்களாக மாற்றுவது, சிறிய தொழில் தொடங்கும் கனவு உள்ளவர்களை முதலாளியாக மாற்றுவது மாற்றும் குறைந்தபட்ச ஊதியம் பெரும் தொழிலாளர்களை நிரந்தர ஊதியம் பெரும் தொழிலாளர்களாக மாற்றுவது.


ஆபரேஷன் ஹோப் ஏழ்மையை ஒழிப்பதற்காக சில்வர் லைட்ஸ் அமைப்பு மூலம் செயல்படுகிறது.


அட்டவணை:


வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்

வரவேற்பு 2

சில ஆலோசனை மற்றும் குறிப்புகள் 3

............................................................................

கல்வித்தரங்கள்

............................................................................

இப்பிரிவின் குறிக்கோள் மற்றும் எண்ணங்கள் பாடம்: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்

பணிதாள்

விளையாட்டு விளையாட்டு அட்டைகள்

.........................................................................................................

பகுதி 2: காசோலை மற்றும் சேமிப்பு

இப்பிரிவின் குறிக்கோள் மற்றும் எண்ணங்கள்



பாடம்: காசோலை மற்றும் சேமிப்பு

குழு நடவடிக்கை

பாடம்: ATM/பற்று அட்டை திறனாய்வு

பணிதாள்கள்: காசோலை மற்றும் சேமிப்பு

..............................................................................................................

பகுதி 3: கடன் அதிகாரம்

இப்பிரிவின் குறிக்கோள் மற்றும் எண்ணங்கள்

பாடம்: கடன்

பணிதாள்: எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க

பணிதாள்: வட்டி வாங்குவது

விளையாட்டு: கொஞ்சம் கடனுக்கு நீங்கள் தகுதி உள்ளவர்

விளையாட்டு அட்டைகள்

....................................................................................................................

பகுதி 4: அடிப்படை மூலதனங்கள்

இப்பிரிவின் குறிக்கோள் மற்றும் எண்ணங்கள்

பாடம்: வரவு செலவு திட்டம் இடுதல் பொருட்கள் வாங்குவது

விளையாட்டு: வரவு செலவு திட்டம் இடுதல் பொருட்கள் வாங்குவது

பணிதாள்கள்: உங்கள் வரவு செலவு திட்டம்


BOOF வங்கி கணக்கிற்கு உங்களை வரவேற்கிறோம்

BOOF என்பது ஆபரேஷன் ஹோப்யில் அடங்கும் ஒரு பொருளாதார கல்வி நிகழ்ச்சி ஆகும்.   BOOF நிகழ்ச்சி 5 பகுதிகளை கொண்டது: I.வங்கிக்கொள்கையின் அடிப்படைகள், II.சரிபார்த்தல் மற்றும் சேமிப்பு கணக்கு, III.கடன் அதிகாரம் IV.அடிப்படை மூலதனங்கள் மற்றும் V.தன்மானம். BOOF 16 அமெரிக்க சந்தைகளிளும் 3 தென் ஆப்ரிக்க நகரங்களிலும் உள்ளது.


வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்:


சில ஆலோசனை மற்றும் குறிப்புகள்


வகுப்புக்கு செல்வதற்கு முன் பாடம் பற்றி அனைத்தும் தெரிந்து இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் அன்றைக்கு நடத்தும் பாடத்திற்கான கருத்து, அணைத்து வார்த்தைகள் மற்றும்
மாணவர்கள் கற்று கொள்ள வேண்டிய சிறந்த திறன் ஆகியவற்றை புரிந்து கொள்ளுங்கள். பல மாணவர்களுக்கு பொருளாதாரம் பற்றி தெரிந்து இருக்க முடியாத காரணத்தால் மாணவர்களுக்கு புரியும் படி உங்களால் விளக்கம் கொடுக்க முடியும் என்பதை பார்த்து கொள்ளுங்கள். "கடன் விகிதம்" , "FDIC"  போன்றவற்றுக்கு விளக்கம் கொடுக்கும் பொழுது தெரிந்த வார்த்தைகள் மற்றும் பயனுள்ள எடுத்துக்காட்டுகளை பயன் படுத்தவும்.


பாடத்தில் வரும் கணக்கை உங்கள் மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மாணவர்களுக்கு கடினமாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு கணக்குகளை கரும்பலகையில் பயிற்சி கொடுப்பது சிறந்தது.


ஒவ்வொரு மாணவரும் இந்த தொகுப்பில் வரும் அணைத்து பணித்தால்களை கொண்ட மாணவர் கையேட்டினை பெறுவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தும் அவர்களிடம் இருக்க வேண்டும் எழுதுகோல் மற்றும் பென்சிலை தவிர்த்து. குறிப்பு:வழக்கமாக மாணவர்கள் அவர்களுக்கு சொந்தமான எழுதுகோல் மற்றும் பென்சில் வைத்து இருப்பார்கள்.


கருத்துகளை மாணவர்கள் புரிந்து கொண்ட உடன் அவர்களை பாராட்டுங்கள். அவர்கள் நண்பர்களும் அதை புரிந்து கொள்ளும் படி மாணவர்களை ஒரு குழுவாக இருக்க அனுமதிங்கள்.


இந்த பாடத்தை கேளிக்கையாக எடுத்து செல்லுங்கள், உங்கள் உற்சாகம், நகைச்சுவை திறன், பொறுமை முதலியவற்றை கொண்டு வர மறக்காதீர்கள். இந்த தேவையானவற்றை கொண்டு வந்தால் உங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியாக உங்களிடம் கற்று கொள்வார்கள்.


கையேடு:

இந்த பாடம் நான்கு பகுதிகளாக பிரிக்க பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் அதிக தகவல்கள் இருப்பதால் இதில் உள்ள கணக்கு மற்றும் பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சீரமைத்து வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் இருப்பவை, கருத்துகளை பற்றிய கலந்துரையாடல், கலந்துரையாடலுக்கான ஆலோசனைகள், பணித்தால்கள் மற்றும் விளையாட்டுகள்.  கணக்கிடல் இருக்கும் பகுதிகள் அனைத்தும் மாணவர் மற்றும் ஆசிரியருக்காண பதிப்புகள் இருக்கும். மாணவருக்கான பதிப்பு நகல் எடுக்கப்பட்டு அணைத்து மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும்.


கல்வித்தரங்கள்

எண்கள், எங்களை குறிக்கும் முறைகள் மற்றும் எங்களின் அமைப்பை தெரிந்து கொள்ளுங்கள்.


  • முழு எண்கள் மற்றும் தசம எண்களை குறிக்க மற்றும் ஒப்பீடு செய்ய தெரிந்து கொள்ளுங்கள்.
  • ஒரு எண்ணுக்கு நிகரான வேறு குறிக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
  • ஒரு பின்னத்தின் அளவை கணக்கிட, மாதிரி, அளவுகோள் மற்றும் அதற்கு நிகரான வேறு வடிவங்களை பயன்


ஒரு செயலுக்கான அர்த்தம் மற்றும் அது எவ்வாறு வேறு ஒன்றுடன் தொடர்பு கொண்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


  • பெருக்கல் மற்றும் வகுத்தளுக்கான வேறு அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்
  • பெருக்களின் விளைவு முழு எண்களை வகுக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
  • பெருக்களின் நேர்மாறாக இருப்பதை போல உள்ள மற்றவைகளை கண்டுபிடித்து கணக்கிடுவதற்கு பயன் படுத்துங்கள்.


சரளமாக கணக்கிடுங்கள்


  • முழு எண்களை சரளமாக வகுக்கும், கூட்டும்,கழிக்கும் மற்றும் பெருக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • மாணவர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு தசம எண்கள் மற்றும் பின்னங்ள் வரும் முழு எண்கள் கணக்குகளின் முடிவுகளை கணக்கிடும் உக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • பொதுவாக பயன் படுத்தும் பின்னங்கள் மற்றும் தசம எண்களை கூட்டுவதற்கும், கழிப்பதற்கும் மாதிரிகள், அளவுகோல் மற்றும் அதற்கு நிகரான வடிவங்களை பயன்படுத்தவும்.
  • முழு எண்களை கணக்கிடுவதற்கு சரியான முறையை தேர்ந்து எடுக்கவும். என் கணிப்பு, மனக்கணக்கு, கணிப்பு கருவி, எழுதுகோல் மற்றும் பென்சில் இவைகளில் ஏதேனும் ஒன்றை கணக்குகளின் குணத்தை பொருத்து தேர்ந்து எடுத்து பயன் படுத்தவும்.


இந்த பாடத்தொகப்பில் அடங்குபவைகள்

Ia.குழு, கழகங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மனித தேவைகள் மற்றும் நலன்களை எவ்வாறு பார்க்கின்றனர் என்பதை ஆராய்ந்து விவரி


IIf.வரலாற்றில் இருந்து பெற்ற அறிவு மூலம், தீர்வு காணல் மற்றும் பொதுப்பிரச்சனைகள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தெரியப்படுத்துங்கள்


IIIc. தகவல் கொடுப்பதற்கும் தகவல்களை உண்டாக்குவதற்கும் வரைபட நூல், தகவல்தளம் , கட்ட அமைப்பு, சுவர்ப்படம், வரைபடம் முதலியவற்றுல் பொருத்தமான தகவல் ஆதாரம் அல்லது புவியியல் முறையை பயன் படுத்துங்கள்.


IIIg.மக்கள் வீடுகள், விளையாட்டுத் திடல் மற்றும் வகுப்பறையை வடிவமைப்புதல் போல எவ்வாறு கலாச்சாரம், சிந்தனைகள், மனோபாவம்ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடங்களை உருவாக்குகிறார்கள் என்பதை விவரி.


IVd.கல்வி அறிவு மற்றும் உடல் அமைப்பு எவ்வாறு ஒருவருடைய நடத்தையை மற்றும் என்பதை காண்பிக்க.


IVe.குடும்பங்கள், குழு மற்றும் சமூகங்கள் ஒரு தனி மனிதருடைய வாழ்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை தெரிந்து விவரிக்க.


IVg.ஒரு நிகழ்ச்சிக்கு தனி நபர் எவ்வாறு பதில் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தை அந்த நிகழ்ச்சியை பகுத்தாய்ந்து கண்டுபிடியுங்கள்.


IVh.ஒரு குறிக்கோளை அடைவதற்கு சுதந்திரமாகவும் கூட்டாகவும் பணியாற்றுங்கள்.


Vc.எடுத்துக்காட்டாக விளங்கும் கல்வி நிலையங்களை கண்டுபிடித்து, மக்களுக்கும் அந்த நிலையத்திற்கும் உண்டான தொடர்பை பற்றி விவரிக்க.


Vf.தொடர்ச்சியான நிலை மற்றும் மாறுதல்கள் கொண்டு வருவதற்கான கல்வி நிலையங்களின் பங்கை எடுத்துகாட்டு கொண்டு விவரிக்க.


VIa.குடும்பம், வகுப்பு முதலிய சமூக அமைப்பிற்கு தொடய்புடைய ஒரு தனி மனிதருடைய உரிமை மற்றும் கடமைகளை ஆராய்க.


VIc.ஒருவருடைய தேவை மற்றும் விருப்பத்திற்கு அரசாங்கம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் மற்றும் வேண்டாம் என்பதை எடுத்துகாட்டு கொண்டு காண்பிக்க.


VIg.தகவல்தொடர்பியல், போக்குவரத்து, தகவல் பரிமாற்றம், ஆயுதங்கள் அபிவிருத்தி ஆகியவற்றிற்கான தொழில்நுட்ப பங்கை ஆராய்க.


VIIb.விருப்பத்திற்கும் தேவைக்கும் உள்ள வேற்றுமைகளை விவரி.


VIIf.பொருளாதார தீர்வுகளில், ஊக்குவிப்பு, பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களின் ஈடுபாட்டினை விவரி


VIIg.தினசரி வாழ்கையில் பணத்திற்கான பங்கை விவரித்து செய்து காட்டுக.


பாடத்தின் குறிக்கோள்


இந்த பாடத்தில் மாணவர்களுக்கு பணம் சம்பாதித்து பொருட்கள் வாங்குவதற்கு பயன் படுத்தப்படுகிறது என்ற கருத்து அறிமுகபடுதப்படும். வங்கிக்கொள்கையின் அடிப்படைகளும் மாணவர்களுக்கு அறிமுகபடுதப்படும்.


இந்த பாடத்தின் முடிவில் உங்கள் மாணவர்களால்


வங்கிக்கொள்கை மற்றும் பணத்தின் அடிப்படைகளை விவரிக்க முடியும்.

கடன் கூட்டுறவுக்கும் வங்கிக்கும் உள்ள வேறுபாட்டினை விவரிக்க முடியும்

சம்பாதித்த பணத்திற்கும் பரிசாக வந்த பணத்திற்கும் உள்ள வேறுபாட்டினை காண முடியும்.

தேவைக்கும் விருபதிற்கும் உள்ள வேறுபாட்டினை காண முடியும்.

அவர்களால் முழு எண்களையும் தசம எண்களையும் கூட்ட மற்றும் கழிக்க முடியும் என்பதை செய்து காட்ட முடியும்.


இந்த பாடத்தில் அடங்கும் கருத்துக்கள்:

இந்த பாடம் பணம் பற்றிய அடிப்படை கருத்துக்கள், பணம் எங்கிருந்து வருகிறது மற்றும் எவ்வாறு செலவு செய்ய படுகிறது போன்ற அடிப்படை கருத்துக்களை கற்று கொடுக்கும். பணத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு வங்கி எவ்வாறு உதவுகிறது என்பதையும் கற்று கொடுக்கும்.


பகுதி 1

வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்


தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள்:


வங்கி

வங்கி பணத்தை பாதுகாப்பாக வைப்தற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணத்தை முதலீடு செய்வதற்கான இடம்.


கடன் கூட்டுறவு

கடன் கூட்டுறவு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவிற்காக செயல்படும் லாபம் இல்லாத அமைப்பு.


பணம்

பொருட்களுக்கு பரிமாற்றம் செய்வதற்காக ஒவ்வொரு நாட்டினரால் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட நாணயம்.


பார்ட்டர்

பணத்தை பயன் படுத்தாமல் ஒரு பொருளுக்கு பதிலாக வேறு பொருளை மாற்றிக்கொள்ளும் வர்த்தகம்.


விருப்பம்

நீங்கள் வாங்குவதற்கு அல்லது சொந்தமாக்கி கொள்வதற்கு விரும்பும் ஏதோ ஒன்று, ஆனால் நீங்கள் உயிர் வாழ்வதற்கு அது அவசியமானது இல்லை.


தேவை

உணவு, வீடு, போக்குவரத்து போன்ற நீங்கள் உயிர் வாழ்வதற்கு வாங்க வேண்டிய அல்லது வைத்து இருக்க வேண்டிய அவசியமான ஏதோ ஒன்று.


பாடம்: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்


பணத்தை பற்றி உங்கள் மாணவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதில் இருந்து தொடங்குங்கள். இது நீங்கள் தலைமைதாங்கும் ஒரு கலந்துரையாடலாக இருக்க வேண்டும்.


கலந்துரையாடலின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் கரும்பலகையில் ஒரு வரைபடம் வரைக.. நடுவில் உள்ள வட்டத்தில் இருந்து தொடங்குங்கள் (பணம் என்றால் என்ன?) சுற்றி இருக்கும் வட்டத்தில் நீங்கள் கலந்துரையாடும் பிற கருத்துகளையும், எண்ணங்களையும் எழுதுக


நீங்கள் உடனுக்குடன் கீழே கொடுக்கப்பட்டவைகளை கேட்கலாம்



பணம் என்றால் என்ன?

பணம் வருவதற்கு முன்பு மக்கள் என்ன பயன் படுத்தினார்கள்? (பார்ட்டர் முறையை விவரிக்க)

பணம் எங்கு இருந்து வருகிறது? (கருவூலத்தில் அரசாங்கம் அதை அச்சடிக்கும் என்பதை விளக்குங்கள்)

நமக்கு எதற்கு பணம் தேவை?

அதை பற்றி நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?

நீங்கள் கடைசியாக வாங்கிய பொருள் என்ன?

உங்கள் அம்மா அல்லது அப்பா கடைசியாக வாங்கிய பொருள் என்ன?

நீங்கள் எதற்கு அதை வாங்கினீர்கள்?

அதை வாங்குவதற்கான பணம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

நீங்கள் வாங்கிய பொருள் தேவைக்கா இல்லை விருப்பத்துக்கா?


Pic 01


எடுத்துக்காட்டுடன் தேவைக்கும் விருப்பத்துக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குக. பேருந்து பயண அட்டை என்பது தேவை ஏனென்றால் மக்கள் பள்ளிக்கு அல்லது வேளைக்கு செல்வதற்கு அது தேவை. அனால் புதிய நிகழ்பட ஆட்டம் என்பது விருப்பம் ஏனென்றால் மாணவர்கள் உயிர் வாழ்வதற்கு அது அவசியம் இல்லை.


  • ஒவ்வொரு மாணவர்கள் வாங்கிய பொருட்களையும் கரும்பலகையில் எழுதி கலந்துரையாடலுக்கு பின் அது விருப்பத்திற்கு வாங்கியதா இல்லை தேவைக்கு வாங்கியதா என்பதை முடிவுசெய்யுங்கள்.ஒவ்வொரு பொருளுக்கும் அடுத்து (வி) அல்லது (தே) என்று குறிக்கவும்.
  • ஒவ்வொரு பொருளும் விருப்பத்திற்கு வாங்கியதா இல்லை தேவைக்கு வாங்கியதா என்று தீர்மானிக்க மாணவர்கள் அனைவரையும் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கவும். ஒவ்வொரு குழுக்களையும் பார்வையிட்டு அவர்கள் சரியான பாதையில் உள்ளார்களா என்பதை உறுதி செய்யுங்கள்.
  • மாணவர்கள் வாங்கிய பெரும்பான்மையான பொருட்கள் விருப்பத்திற்கா அல்லது தேவைக்கா என்பதை அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் தேவைகள் அனைத்தும் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை பற்றி பேசுங்கள். அவர்கள் வாழ்க்கையில் தேவையானவை அனைத்தையும் பட்டியல் இடுங்கள் (இதில் அடங்கும் சில, வீடு போன்ற வசிக்கும் இடங்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து, பாதுகாப்பு (காப்பீடு அல்லது அவசர கால ஆயத்த பொருள் இதில் அடங்கும்). அவசர கால ஆயத்த பொருளை பற்றி சொல்லும் பொழுது BOOFயின் அவசர கால பொருளாதார முதலுதவி பொருள்(EFFAK), பொருளாதார பதிவுகள், சட்ட ஆவணங்கள், வீட்டு ஆவணங்கள் முதலியவற்றை வகைபடுத்தி வைத்து கொள்ள உதவும் என்பதை குறிப்பிடுங்கள்.
  • நேசிக்கப்படுவது, நண்பர்கள் மற்றும் குடும்பம் இருப்பது போன்ற தேவைகளை வாங்க முடியாது என்பதை பற்றியும் உணவு உறைவிடம் போன்ற பிற தேவைகளை வாங்க முடியும் என்பதை பற்றியும் நீங்கள் பேசலாம்.
  • மாணவர்களை சிறிய குழுக்களாக பிரித்து கொள்ளுங்கள். அவர்களிடம் பழைய செய்தித் தாள், வார அல்லது மாத இதழ்களை கொடுங்கள். அதில் உள்ள படங்கள் மற்றும் வார்த்தைகளை கத்தரித்து வேறு இரண்டு காகிதத்தில் ஒட்டச் சொல்லுங்கள். ஒரு காகிதம் தேவை என்றும் மற்றொரு காகிதம் விருப்பம் என்றும் குறித்து இருக்க வேண்டும்.


Pic 02


இதற்கு பின் பணம் நமக்கு பணம் எப்படி கிடைக்கிறது என்பதை பற்றி கலந்துரையாடுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் மற்றும் உங்களுக்கு பரிசாக வந்த பணத்தை வேறுபடுதுங்கள். வீடு மற்றும் மகிழூந்து வாங்குவதற்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடன் அட்டை மூலம் வரும் பணத்தை பற்றியும் நீங்கள் கலந்துரையாடலாம்.


கையேடு பதில்கள்


1. கபேக்கு அன்பளிப்பாக வந்த அணைத்து தொகையையும் வட்டம் இடுங்கள்.அன்பளிப்பாக வந்த மொத்த தொகை எவ்வளவு?

வட்டம்: பாட்டி கே கொடுத்த பிறந்த நாள் காசோலை $20.00; அத்தை இலாவிடம் இருந்து வந்த பிறந்தநாள் காசோலை $15.00; மொத்த பரிசு தொகை: $35.00


2. கபே சம்பாதித்த அணைத்து தொகையையும் அடிக்கோடிடவும். கபே வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு?

அடிக்கோடு: வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வதற்காக வாங்கிய பணம் $10.00; என் தங்கையை ஒரு வாரம் காற்பந்தாட்ட பயிற்சிக்காக நடக்க வைத்து அழைத்து செல்ல வாங்கிய பணம் $5.00; என் தந்தையின் மகிழுந்தை சுத்தம் செய்ய வாங்கிய பணம் $5.00; என் பாட்டியின் பூந்தோட்டத்தில் செடி நடுவதற்காக வாங்கிய பணம் $7.00; சம்பாதித்த மொத்த தொகை: $27.00


3. அன்பளிப்பாக வந்த மற்றும் கபே வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு?

$62.00


4. பணம் சம்பாதிப்பது என்றால் என்ன?

சம்பாதித்த பணம் என்பது ஒரு வேலையை முடித்ததற்காக உங்களுக்கு கிடைக்கக்கூடிய பணம்.


5. நீங்கள் எப்போதாவது பணம் சம்பாதித்தது உண்டா? நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு என்ன செய்தீர்கள்?

பதில்கள் மாறுபடும்...


6.கபே பிறந்த நாளுக்கு பரிசாக வந்த மற்றும் அவன் சம்பாதித்த தொகையை வைத்து ஒரு புதிய நிகழ்பட விளையாட்டு வாங்க இருக்கிறான்.வரியுடன் சேர்த்து அதன் மதிப்பு $30.00 ஆகும். மீதி தொகையை கபே வங்கியில் போட இருக்கிறான். நிகழ்பட விளையாட்டு வாங்கிய பின் கபே வசம் இருக்கும் பணம் எவ்வளவு?

$32.00


7.பணம் சம்பாதிக்க வேறு வழிகளை உங்களால் யோசிக்க முடியுமா? அந்த வழிகளை கீழே எழுதவும்.

பதில்கள் மாறுபடும். குழந்தையை பராமரிப்பது, தோட்டத்தில் களை எடுப்பது, வீட்டை சுத்தம் செய்வது, மகிழுந்தை சுத்தம் செய்வது, பெற்றோற்களுக்கு உதவுவது போன்றவைகள் இதில் அடங்கும்.


பாட்டி கே கொடுத்த பிறந்த நாள் காசோலை Pic 03

வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வதற்காக வாங்கிய பணம் $10.00

என் தங்கையை ஒரு வாரம் காற்பந்தாட்ட பயிற்சிக்காக நடக்க வைத்து அழைத்து செல்ல வாங்கிய பணம் $5.00

என் தந்தையின் மகிழுந்தை சுத்தம் செய்ய வாங்கிய பணம் $5.00

அத்தை இலாவிடம் இருந்து வந்த பிறந்தநாள் காசோலை Pic 04

என் பாட்டியின் பூந்தோத்தத்தை நடுவதற்காக வாங்கிய பணம் $7.00


குறிப்பு: மாணவர்களிடம் கணக்கீட்டு கருவி இருந்தாலும் பேனா மற்றும் காகிதம் கொண்டு கணிக்கும் முறையை ஊக்கப்படுத்துங்கள்.


Pic1



1. கபேக்கு அன்பளிப்பாக வந்த அணைத்து தொகையையும் வட்டம் இடுங்கள். அன்பளிப்பாக வந்த மொத்த தொகை எவ்வளவு?


.....................................................................................................


2. கபே சம்பாதித்த அணைத்து தொகையையும்

அடிக்கோடிடவும். கபே வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு? ...............................................................................................



3. அன்பளிப்பாக வந்த மற்றும் வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு? .....................................................................................................


4. பணம் சம்பாதிப்பது என்றால் என்ன?

..................................................................................................


5. நீங்கள் எப்போதாவது பணம் சம்பாதித்தது உண்டா? நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு என்ன செய்தீர்கள்? ..............................................................................................................................................

..............................................................................................................................................

............................................................................................................................................. .


6.கபே ஒரு புதிய நிகழ்பட விளையாட்டு வாங்க இருக்கிறான்.வரியுடன் சேர்த்து அதன் மதிப்பு $30.00 ஆகும். மீதி தொகையை கபே வங்கியில் போட இருக்கிறான். நிகழ்பட விளையாட்டு வாங்கிய பின் கபே வசம் இருக்கும் பணம் எவ்வளவு?

.........................................................................................................


7.பணம் சம்பாதிக்க வேறு வழிகளை உங்களால் யோசிக்க முடியுமா? அந்த வழிகளை கீழே எழுதவும்.

..............................................................................................................................................

..............................................................................................................................................


பாட்டி கே கொடுத்த பிறந்த நாள் காசோலை $20.00

வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வதற்காக வாங்கிய பணம் $10.00

என் தங்கையை ஒரு வாரம் காற்பந்தாட்ட பயிற்சிக்காக நடக்க வைத்து அழைத்து செல்ல வாங்கிய பணம் $5.00

என் தந்தையின் மகிழுந்தை சுத்தம் செய்ய வாங்கிய பணம் $5.00

அத்தை இலாவிடம் இருந்து வந்த பிறந்தநாள் காசோலை $15.00

என் பாட்டியின் பூந்தோத்தத்தை நடுவதற்காக வாங்கிய பணம் $7.00


விளையாட்டு: கற்றுக் கொளளுங்கள், சம்பாதியுங்கள்

மாணவர்களை ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்களாக பிரித்து கொள்ளுங்கள். ஒரு கேள்விக்கு சரியான பதில் கொடுப்பதின் மூலம், ஒவ்வொரு குழுவிற்கும் உங்களிடம் இருக்கும் அட்டைகளில் இருந்து, சம்பாதியுங்கள்! அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்குங்கள்.கேள்விகள் அனைத்தும் அவர்கள் அன்றைக்கு கற்று கொண்ட பாடத்தில் இருந்து கேட்கப்படும்.


கேள்விகள்


1.வங்கி என்றால் என்ன?

பணத்தை பாதுகாப்பாக வைப்தற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணத்தை முதலீடு செய்வதற்கான இடம்.


2.வங்கியை போன்றே ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவிற்காக செயல்படும் லாபம் இல்லாத அமைப்பு என்ன? கடன் கூட்டுறவு


3.பார்ட்டர் முறை என்றால் என்ன?

ஒரு பொருளுக்காக வேறு ஒரு பொருளை மாற்றிக்கொள்வது.


4.பணம் எங்கு இருந்து வருகிறது?

அரசாங்கம் அதை அச்சடிக்கிறது.


5.உங்கள் பிறந்த நாளுக்காக தந்தை ஒரு காசோலை தருகிறார். இது நீங்கள் சம்பாதித்த பணமா அல்லது உங்களுக்கு பரிசாக வந்த பணமா?

பரிசு


6.நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகமையில் இருக்கும் நான்கு புல்வெளிகளில் புல் வெட்டி இருக்கிறீர்கள். ஒவ்வொரு புல்வெளிக்கும் $5 கொடுத்து உள்ளார்கள். நீங்கள் சம்பாதித்தது எவ்வளவு?

$20.00


7.உங்கள் பாகத்து வீடு முற்றத்தில் உங்கள் நாய் ஒரு குழி பறித்து விட்டது. அதற்கு நீங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து $10 கொடுக்க வேண்டும். நீங்கள் $20 சம்பாதித்து இருந்தீர்கள் என்றால், அவர்களுக்கு பணம் செலுத்திய பின் உங்களிடம் இருக்கும் தொகை எவ்வளவு?

$10.00


8.நீங்கள் ஒரு புதிய திரைப்படம் பார்க்க வேண்டும். இது தேவையா இல்லை விருப்பமா? விருப்பம்


9.உங்கள் சகோதரி ஒரு கண் கண்ணாடி வாங்க வேண்டும். இது தேவையா இல்லை விருப்பமா?

தேவை


10.உங்கள் தந்தை நீங்கள் $50.00 சம்மாதித்தீர்கள் என்றால் அதே அளவு தொகையை ஒரு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு உங்களுக்கு தருவதாக கூறியுள்ளார். அப்படி என்றால் உங்கள் தந்தை உங்களுக்கு கொடுக்கும் பணம் எவ்வளவு?

$50.00


11.இரு சக்கர வாகனத்தின் மதிப்பு $300.00 நீங்கள் சம்பாதித்த பணம் $50 மற்றும் உங்கள் தந்தை உங்களுக்கு கொடுத்த பணம் இருந்தும் மேலும் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்?

$200.00


12.நீங்கள் மீதி தொகையை சம்பாதிப்பதற்கு, உங்கள் தங்கைக்கு வீட்டு பாடத்தில் உதவி புரிய சம்மதித்து இருகிறீர்கள். உங்களுக்கு மேலும் ..... தேவை. உங்கள் தங்கைக்கு உதவி புரியும் ஓவ்வொரு மணி நேரத்திற்கும் உங்கள் அம்மா .... தருவார்கள். அப்படி என்றால் ..... சம்பாதிப்பதற்கு நீங்கள் எவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்?

40 மணி நேரம்.


13.உங்கள் நண்பர் காது வலிக்காக மருத்துவரிடம் செல்ல வேண்டும். இது தேவையா இல்லை விருப்பமா?

தேவை


14.நீங்கள் பள்ளிக்கு சென்று வருவதிற்கு மிதிவண்டியை பயன் படுத்தலாம். இரு சக்கர வாகனம் தேவையா இல்லை விருப்பமா? விவரிக்க

தேவை. மக்கள் வேளைக்கு செல்ல பேருந்து பயண அட்டை அல்லது மகிழுந்து வைத்து இருபது போல பள்ளிக்கு சென்று வருவதற்கு உங்களுக்கு இரு சக்கர வாகனம் தேவை.


15.உங்கள் அக்காவிற்கு வங்கி கணக்கு வைத்து கொள்ள விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக பணத்தை படுக்கைக்கு அடியில் ஒரு பையில் வைத்து கொள்ளலாம் என்று கூருகிறார். இது ஏன் சிறந்தது இல்லை என்பதை விவரிக்க.

அவருடைய பணம் கானாமல் போய் விடலாம், திருட படலாம் அல்லது நாய் அதை தின்று விடலாம். பணம் படுக்கைக்கு அடியில் இருக்கும் போது அதை சேமிப்பது கடினம் என்றும் நீங்கள் விவரிக்கலாம், ஏனென்றால் அதை செலவு செய்ய நீங்கள் தூண்டப்படலாம்.



Pic 05









hgfffffffff

fhhhhhhhhhhhhh

Ad blocker interference detected!


Wikia is a free-to-use site that makes money from advertising. We have a modified experience for viewers using ad blockers

Wikia is not accessible if you’ve made further modifications. Remove the custom ad blocker rule(s) and the page will load as expected.