FANDOM




பகுதியின் குறிக்கோள்

இந்த பகுதியில் மாணவர்கள் கடன் பற்றி கற்று கொள்வார்கள். அவர்கள் கடன் அட்டை என்றால் என்ன, அது எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதை எவ்வாறு பொறுப்பாக வைத்து இருப்பது என்று கற்று கொள்வார்கள். கடன் விகிதம் மற்றும் இதர கடன்கள் பற்றியும் அவர்கள் கற்று கொள்வார்கள்.


இந்த பாடத்தின் முடிவில் உங்கள் மாணவர்களால்

  • கடன் அட்டை என்றால் என்ன மற்றும் அது எவ்வாறு பயன் படுகிறது என்று விவரிக்க முடியும்
  • கடன் என்றால் என்ன என்று விவரிக்க முடியும்
  • வட்டி எவ்வாறு கிடைக்கிறது என்று விவரிக்க முடியும்


பகுதி 3:


கடன் அதிகாரம்


தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள்


இரவல்

ஒருவர் வங்கியில் இருந்து இரவல் வாங்கினால் அதை அவர் வட்டியுடன் சேர்த்து வங்கிக்கு செலுத்த வேண்டும். இது பொதுவாக பணத்தை குறிக்கும்.


கடன்

ஒரு பொருளை வாங்குவதற்காக ஒருவர் மற்றொருவரிடம் இருந்து வாங்கும் பணம். இதை அவர் ஏற்கனவே குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.


கடன் அட்டை

உங்கள் கடன் எல்லைக்குள் பொருட்கள் வாங்குவதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.


கடன் விகிதம்

உங்கள் கடன் வரலாற்றில் இருந்து நீங்கள், உங்கள் கடன் மற்றும் கடன் அட்டை தொகையை சரியாக செலுத்துவீர்கள் என்று உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை.


அடையாள திருட்டு

உங்களுக்குரிய தனிப்பட்ட தகவல்களை உங்கள் அனுமதி இல்லாமல், மோசடி செய்வதற்கோ அல்லது வேறு குற்றங்கள் செய்வதற்கோ பயன் படுத்துவது. இது ஒரு குற்றம்.


வட்டி

ஒருவர் கடனாக வாங்கிய தொகைக்கு செலுத்தும் பணம் அல்லது ஒரு பொருளாதார நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணம் வைத்து இருப்பவருக்கு வழங்கும் தொகை.


வட்டி விகிதம்

கடன் வாங்கிய தொகைக்காக செலுத்தப்பட வேண்டிய தொகையின் சதவிகிதம். பொதுவாக இது வருட விகிதம் ஆகும்.


இரவல்

ஒருவர் தான் வாங்கிய தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் சேர்த்து தருவர் என்ற நம்பிக்கையில் அவருக்கு வழங்கும் பணம்.


வழங்கப்படவேண்டிய பொருட்கள்

  • கையேடுகள்
  • கடன் அட்டை


பாடம்: கடன்

கடன் அட்டை மற்றும் பற்று அட்டையை கையில் பிடித்து கொண்டு இந்த பாடத்தை துவங்குங்கள். மாணவர்களிடம் பார்ப்பதற்கு இந்த இரண்டு அட்டைகளும் ஒன்றாக இருந்தாலும் இவை இரண்டும் வெவ்வேறு என்று கூறுங்கள்.


கலந்துரையாடலின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் கரும்பலகையில் ஒரு வரைபடம் வரைக.. நடுவில் உள்ள வட்டத்தில் இருந்து தொடங்குங்கள் (கடன் என்றல் என்ன?) சுற்றி இருக்கும் வட்டத்தில் நீங்கள் கலந்துரையாடும் பிற கருத்துகளையும், எண்ணங்களையும் எழுதுக. Pic 016

மாணவர்களிடம் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை எவ்வாறு வேறுபடுகிறது என்று கேளுங்கள். அவர்களிடம் இருந்து விடை கிடைத்த பின் காலியாக உள்ள இடங்களை நிரப்புக. மாணவர்களிடம் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை எவ்வாறு வேறுபடுகிறது என்று கேளுங்கள். அவர்களிடம் இருந்து விடை கிடைத்த பின் காலியாக உள்ள இடங்களை நிரப்புக.


கீழே கொடுத்து உள்ளவைகளை மாணவர்களுக்கு விளக்குங்கள்

  • நீங்கள் பற்று அட்டையை பயன் படுத்தும் பொழுது பணம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்திற்கு நீங்கள் உங்கள் பற்று அட்டையை பயன் படுத்தலாம். நீங்கள் கடன் அட்டையை பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு ஒரு கடன் எல்லை நிர்னையகப்படுகிறது. இந்த நிர்னையக்கப்பட்ட தொகைக்கு நீங்கள் கடன் அட்டை கொண்டு பொருட்கள் வங்கிக் கொள்ளலாம்.
  • உங்கள் கடன் விகிதத்தை கொண்டு வங்கி உங்கள் கடன் எல்லையை தீர்மானிக்கும். கடன் விகிதத்தை வங்கி, ஒருவர் தான் வாங்கிய பொருட்களின் தொகையை சரியான நேரத்தில் கட்டி விட்டார்களா மற்றும் அவர்கள் ஒரு மாதத்திற்கு கடன் அட்டை கொண்டு வாங்கும் பொருட்களின் மதிப்பை வைத்து தீர்மானிக்கும். இதை கருத்தில் கொண்டு கடன் அட்டை நிறுவனம் உங்கள் கடன் எல்லையை தீர்மானிக்கும்.
  • கடன் அட்டை என்பது இலவசமாக வரும் பணம் இல்லை. உங்கள் கடன் அட்டையை பயன் படுத்தி நீங்கள் $300.00 மதிப்புடைய பொருட்கள் வாங்கினால் அந்த தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும்.
  • ஆண்டுக்கொரு முறை உங்கள் கடன் அட்டை நிறுவனத்திற்கு நீங்கள் வட்டி செலுத்த வேண்டி வரும். அதாவது நீங்கள் மாத இறுதிக்குள் உங்கள் கடன் அட்டைக்கான தொகையை செலுத்தவில்லை என்றால் அந்த பணத்திற்கான வட்டியை அந்நிறுவனம் உங்கள் அட்டைக்கான தொகையுடன் சேர்த்து விடும்.
  • அடையாள திருட்டு என்ற குற்றத்தை பற்றி உங்கள் மாணவர்களுக்கு தெரியுமா என்று கேளுங்கள்.


கடன் அட்டை பற்றின அடிப்படைகளை கற்று கொடுத்த பின் உங்கள் மாணவர்களிடம் அவர்கள் எதாவது பொருட்கள் வாங்க நினைக்கிறார்களா என்று கேளுங்கள்.


ஒரு மாணவர் என்ன வாங்க நினைக்கிறார் என்பதை எடுத்துக்காட்டாக கொண்டு அந்த பொருளை கடன் அட்டை மூலம் வாங்குவதற்கு அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை கணக்கிடுங்கள்.


எடுத்துக்காட்டாக கீழே கொடுத்து உள்ளவைகளை நீங்கள் கரும்பலகையில் எழுதலாம்.


புதிய இரண்டு சக்கர வண்டி: $400.00

APR வட்டி: 20 %


நீங்கள் அந்த தொகையை ஒரு வருடத்திற்குள் கட்டி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அதாவது நீங்கள் கடன் அட்டை கொண்டு வாங்கிய தொகை $400.00 மற்றும் 21% வட்டி கட்ட வேண்டும்.


$400.00 * 20%

400 * 0.20 = 80

உங்களுடைய வட்டி $80.00


அதாவது நீங்கள் உங்கள் வண்டிக்கு $480.00 கட்ட கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பணத்தை கட்டுவதற்கு உங்களுக்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆனால், இந்த தொகையை காட்டிலும் அதிக தொகை நீங்கள் செலுத்த வேண்டி வரும். ஏனென்றால் APR உங்கள் தொகையுடன் கூட்டப்படும்.


கையேடு: எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்கள் பதில்கள்:



1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளுக்கு சரியா (ச), தவரா (த) என்று குறிக்கவும். கபே மற்றும் ஜாய் முதல் வரிக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்கள் உதவி தேவை.


த - உங்கள் கடன் அட்டைக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை

ச - உங்கள் தொகையை சரியான நேரத்தில் செலுத்தினால், உங்கள் கடன் விகிதம் அதிகம் ஆகும். ச - உங்கள் கடன் அட்டை தொகையை கட்டுவதற்கு கால தாமதம் ஆனால், நீங்கள் அதிக தொகை கட்ட வேண்டும்.

த - எப்பொழுதும் கடன் அட்டை கொண்டு பொருட்கள் வாங்குவது சாமர்த்தியம்..

ச - நெருக்கடி நேரத்தில் கடன் அட்டையை பயன் படுத்துவது நல்லது.

த - கடன் அட்டை பெற்று கொண்ட உடன் நீங்கள் விரும்பியதை வாங்க வேண்டும்.

ச - உங்கள் அட்டையை வைத்து நீங்கள் சேர்க்கும் தொகையை வைத்து நிர்வாகம் உங்கள் கடன் எல்லையை தீர்மானிக்கும்.

ச - உங்கள் கடன் எல்லை தொகை என்பது உங்கள் கடன் அட்டைக்கு நிர்வாகத்தால் மாதம் தோறும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ஆகும்.

த - உங்கள் கடன் அட்டை தொகையை செலுத்தவில்லை என்றால், நீங்கள் மேலும் செலவு செய்து உங்கள் கடன் அட்டை தொகையை அதிகப்படுத்தலாம்.


2. ஜோயின் அம்மா கடன் அட்டை கொண்டு ஒரு சோபா வாங்கலாம் என்று நினைக்கிறார். அவருக்கு அந்த தொகையை செலுத்துவதற்கு ஒரு வருடம் ஆகும். சோபாவின் மதிப்பு $800.00 மற்றும் APR வட்டி விகிதம் 20% இருந்தால், அவர் கடன் அட்டை தொகையை வட்டியுடன் செலுத்திய பின்பு சோபாவின் மதிப்பு என்ன? (குறிப்பு: 800 * .20 = வட்டி விகிதம்)

$160.00


3.வட்டியுடன் சேர்த்து சோபாவின் மதிப்பு என்ன?

$960.00


4. கடன் அட்டை கொண்டு வாங்கும் பொருட்களுக்கு, பொருட்களின் மதிப்பை காட்டிலும் அதிக தொகை செலுத்த வேண்டி இருந்தால், கடன் அட்டையை படுத்துவீர்களா? ஏன் / ஏன் இல்லை?

விடைகள் மாறுபடும் எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க'!


Pic8


1. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளுக்கு சரியா (ச), தவரா (த) என்று குறிக்கவும். கபே மற்றும் ஜாய் முதல் வரிக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்கள் உதவி தேவை.

- உங்கள் கடன் அட்டைக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.

...... உங்கள் தொகையை சரியான நேரத்தில் செலுத்தினால், உங்கள் கடன் விகிதம் அதிகம் ஆகும்.

...... உங்கள் கடன் அட்டை திகை கட்டுவதற்கு கால தாமதம் ஆனால், நீங்கள் அதிக தொகை கட்ட வேண்டும். ...... எப்பொழுதும் கடன் அட்டை கொண்டு பொருட்கள் வாங்குவது சாமர்த்தியம்.

...... நெருக்கடி நேரத்தில் கடன் அட்டையை பயன் படுத்துவது நல்லது.

...... கடன் அட்டை பெற்று கொண்ட உடன் நீங்கள் விரும்பியதை வாங்க வேண்டும்.

...... உங்கள் அட்டையை வைத்து நீங்கள் சேர்க்கும் தொகையை வைத்து நிர்வாகம் உங்கள் கடன்

எல்லையை தீர்மானிக்கும்.

...... உங்கள் கடன் எல்லை தொகை என்பது உங்கள் கடன் அட்டைக்கு நிர்வாகத்தால் மாதம் தோறும்

அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ஆகும். ...... உங்கள் கடன் அட்டை தொகையை செலுத்தவில்லை என்றால், நீங்கள் மேலும் செலவு செய்து உங்கள் கடன் அட்டை தொகையை அதிகப்படுத்தலாம்.


2. ஜோயின் அம்மா கடன் அட்டை கொண்டு ஒரு சோபா வாங்கலாம் என்று நினைக்கிறார். அவருக்கு அந்த தொகையை செலுத்துவதற்கு ஒரு வருடம் ஆகும். சோபாவின் மதிப்பு $800.00 மற்றும் APR வட்டி விகிதம் 20% இருந்தால், அவர் கடன் அட்டை தொகையை வட்டியுடன் செலுத்திய பின்பு சோபாவின் மதிப்பு என்ன? (குறிப்பு: 800 * .20 = வட்டி விகிதம்)

............................................................................................................................


3. வட்டியுடன் சேர்த்து சோபாவின் மதிப்பு என்ன? .......................................................................................................................


4. கடன் அட்டை கொண்டு வாங்கும் பொருட்களுக்கு, பொருட்களின் மதிப்பை காட்டிலும் அதிக தொகை செலுத்த வேண்டி இருந்தால், கடன் அட்டையை படுத்துவீர்களா? ஏன் / ஏன் இல்லை?

....................................................................................................................................................................

....................................................................................................................................................................

....................................................................................................................................................................


கடன் அட்டை பகுதியை முடித்தவுடன், கடன் பகுதியை தொடங்குங்கள்


கலந்துரையாடலை சரியாக கொண்டு செல்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை பயன் படுத்துங்கள்:


  • அவர்கள் தங்கள் நண்பருக்கு கடன் கொடுத்து இருக்கிறார்களா அல்லது கடன் வாங்கிய நண்பர், உடன் பிறந்தோர் அல்லது பெற்றோர் அவர்களுக்கு இருக்கிறார்களா?
  • கடன் என்றால் என்ன?
  • மக்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள்?
  • விலை உயர்ந்த எந்த பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கடன் வாங்குகிறார்கள்?
  • மாணவர்களிடம் வங்கி ஏன் கொடுத்த கடனுக்கு வட்டி வாங்குகிறது என்று அவர்களுக்கு தெரியுமா என்று கேளுங்கள்?


மாணவர்களிடம் உங்கள் நண்பர் அண்மையில் $500,000.00 மதிப்புடைய வீடு வாங்கியுள்ளார் என்று கூருங்கள். அவர் அதற்கு கடன் வாங்கியுள்ளார் மற்றும் அதற்கு 5% வட்டி கட்டுகிறார். உங்கள் நண்பருக்கு அந்த கடனை கட்டுவதற்கு 20 வருடங்கள் ஆகும். மாணவர்களுக்கு 20 வருடங்களுக்கான வட்டியை கணக்கிடுவதற்கு உதவுங்கள்.


முதலில் மாணவர்களிடம் ஒரு வருடத்திற்கான வட்டி எவ்வளவு என்று கண்டுபிடிக்க சொல்லுங்கள்.

$500,000 * .05 = $25000


பின்னர் 25 வருடங்களுக்கு எவ்வளவு வட்டி கட்டப்படும் என்று கணக்கெடுங்கள்

$25,000 * 25 = $625,000


அதாவது 25 வருடங்களில் உங்கள் நண்பர் வீட்டிற்கான தொகையை வட்டியாக கட்டுவார். மாணவர்களிடம் அதிக வட்டி கட்ட வேண்டும் என்கிற போதும் மக்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள் என்பதை பற்றி பேசுங்கள். (மக்களுக்கு வீடு போன்ற அதிக மதிப்புடையவைகளை வாங்குவதற்கு இது தான் ஒரே வழி என்பதை புரியவையுங்கள்).



93

கையேடு

பதில்கள் (உண்மையான கையேடு அடுத்த பக்கத்தில் உள்ளது)


1. ஜாய்யின் குடும்பம் $20,000.00 மதிப்புடைய ஒரு புதிய மகிழுந்து வாங்க இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வங்கியில் இருந்து கடன் வாங்குகிறார்கள். கடனின் வட்டி விகிதம் 5 % மற்றும் இந்த கடனை கட்டுவதற்கு அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். வாகனத்திற்கு உண்டான வட்டி எவ்வளவு?

$5000.00


2 . வாகனத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?(வட்டி + வாகனத்தின் மதிப்பு)

$25,000.00


3. கப்ரியல் குடும்பத்திற்கு வீட்டு கடன் உள்ளது. அவர்கள் வீட்டின் மதிப்பு $5000,000மற்றும் வட்டி விகிதம் 5% ஆகும். அவர்கள் குடும்பத்திற்கு இந்த கடனை கட்டுவதற்கு 30 வருடங்கள் ஆகும். 30 வருடங்களுக்கு அவர்கள் கட்டும் வட்டி என்ன?

$750,000.00


4. வீட்டின் மொத்த மதிப்பு என்ன?(வட்டி+வீட்டின் மதிப்பு)

$1,250,000.00


Pic 012

Pic9



1. ஜாய்யின் குடும்பம் $20,000.00 மதிப்புடைய ஒரு புதிய மகிழுந்து வாங்க இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வங்கியில் இருந்து கடன் வாங்குகிறார்கள். கடனின் வட்டி விகிதம் 5 % மற்றும் இந்த கடனை கட்டுவதற்கு அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். வாகனத்திற்கு உண்டான வட்டி எவ்வளவு?

...........................................................................................................

2 . வாகனத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?

(வட்டி + வாகனத்தின் மதிப்பு)

...........................................................................................................

3. கப்ரியல் குடும்பத்திற்கு வீட்டு கடன் உள்ளது. அவர்கள் வீட்டின் மதிப்பு $5000,000மற்றும் வட்டி விகிதம் 5% ஆகும். அவர்கள் குடும்பத்திற்கு இந்த கடனை கட்டுவதற்கு 30 வருடங்கள் ஆகும். 30 வருடங்களுக்கு அவர்கள் கட்டும் வட்டி என்ன?

..................................................................................................

4. வீட்டின் மொத்த மதிப்பு என்ன?

.................................................................................


விளையாட்டு: நீங்கள் சிறிய கடனுக்கு தகுதியானவர்


மாணவர்களை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரித்து கொள்ளுங்கள். ஒரு கேள்விக்கு சரியான பதில் கொடுப்பதின் மூலம், ஒவ்வொரு குழுவிற்கும் உங்களிடம் இருக்கும் அட்டைகளில் இருந்து, சம்பாதியுங்கள்! அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்குங்கள்.கேள்விகள் அனைத்தும் அவர்கள் அன்றைக்கு கற்று கொண்ட பாடத்தில் இருந்து கேட்கப்படும்.


கேள்விகள்


1.கடன் விகிதம் என்றால் என்ன?

உங்கள் கடன் வரலாற்றில் இருந்து நீங்கள், உங்கள் கடன் மற்றும் கடன் அட்டை தொகையை சரியாக செலுத்துவீர்கள் என்று உங்கள் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை.


2.கடன் அட்டை என்றால் என்ன?

உங்கள் கடன் எல்லைக்குள் பொருட்கள் வாங்குவதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.


3.கடன் என்றால் என்ன?

ஒரு பொருளை வாங்குவதற்காக ஒருவர் மற்றொருவரிடம் இருந்து வாங்கும் பணம். இதை அவர் ஏற்கனவே குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் தொகையை சேர்த்து திருப்பி கொடுக்க வேண்டும்.


4.உங்கள் தந்தை கடன் அட்டை கொண்டு $400.00 மதிப்புடைய இரண்டு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். அதன் APR 20% ஆகும். உங்கள் தந்தை அந்த கடனை ஒரு வருடத்திற்குள் செலுத்தி விட்டால் அந்த வாகனத்தின் மதிப்பு என்ன?

$480.00


5.நீங்கள் உங்கள் சகோதரரிடம் $20.00 கடன் வாங்கி உள்ளீர்கள். அவர் உங்களிடம் இருந்து $5.00 வட்டி வசூலிப்பதாக கூறியுள்ளார். நீங்கள் உங்கள் சகோதரரிடம் திருப்பி கொடுக்க வேண்டிய தொகை எவ்வளவு?

$25.00


6.மக்கள் ஏன் கடன் வாங்குகிறார்கள்?

மக்கள் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கான முழு தொகையை செலுத்துவதற்கான பணம் அவர்களிடம் இல்லை என்பதால் கடன் வாங்குகிறார்கள்.


7.உங்களுக்கு எவ்வாறு நல்ல கடன் விகிதம் கிடைக்கும்?

நம்பகரமான ஊதியம் இருப்பது மற்றும் கடன் அட்டை தொகையை சரியான நேரத்தில் காட்டுவதின் மூலமும் நல்ல கடன் விகிதம் கிடைக்கும்.


8.கடன் எல்லை என்றால் என்ன?

உங்கள் கடன் அட்டை கொண்டு நீங்கள் பொருட்கள் வாங்குவதற்காக நிர்ணயக்கப்பட்ட தொகை. இது உங்கள் கடன் விகிதத்தில் இருந்து தீர்மானிக்கப்பட்டது.


9.உங்கள் பெற்றோர் $100,000 மதிப்புடைய வீடு வாங்கயுள்ளனர். இந்த கடனின் வட்டி விகிதம் 5% மற்றும் இந்த கடனை கட்டுவதற்கு அவர்களுக்கு ஐந்து வருடங்கள் ஆகும் என்றால் இந்த வீட்டிற்கான மொத்த வட்டி எவ்வளவு?

$100,000


10.வட்டியுடன் சேர்த்து வீட்டின் மதிப்பு என்ன?

$200,000

Ad blocker interference detected!


Wikia is a free-to-use site that makes money from advertising. We have a modified experience for viewers using ad blockers

Wikia is not accessible if you’ve made further modifications. Remove the custom ad blocker rule(s) and the page will load as expected.