FANDOM




பகுதியின் குறிக்கோள்:


இந்த பகுதியில் மாணவர்கள் வரவு செலவுத்திட்டம் மற்றும் பொருட்கள் வாங்குதல் பற்றி கற்று கொள்வார்கள். அவர்கள் வரவு செலவுத்திட்டத்தை எப்படி பயன் படுத்துவது மற்றும் புத்திசாலித்தனமாக பொருட்கள் எப்படி வாங்குவது என்றும் கற்று கொள்வார்கள்.


இந்த பாடத்தின் முடிவில் உங்கள் மாணவர்களால்

  • வரவு செலவுத்திட்டம் என்றல் என்ன என்று விவரிக்க முடியும்.
  • வரவு செலவுத்திட்டத்தை எப்படி பயன் படுத்துவது என்று விவரிக்க முடியும்.
  • நிலையான செலவு மற்றும் மாறுபடுகின்ற செலவிற்கான வேறுபாடுகளை விவரிக்க முடியும்.
  • புத்திசாலித்தனமாக பொருட்கள் எப்படி வாங்குவது என்று விவரிக்க முடியும்.



பகுதி 4:


அடிப்படை மூலதனங்கள்


தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள்


வரவு செலவுத்திட்டம்



நிலையான செலவு உங்கள் வீட்டு வரவு செலவுத்திட்டத்தில் அனைத்து மாதங்களிலும் அடங்கி இருக்கும் ஒரு செலவு. எடுத்துக்காட்டு: வீட்டு வாடகை.


வரவு

ஒரு வேலையே முடித்ததற்காக கிடைக்கப்படும் சம்பளம்/பணம் அல்லது பரிசாக கிடைக்கப்பெற்ற பணம்.


மாறுபடும் செலவு

மாதந்தோரும் உங்கள் வரவு செலவுத்திட்டத்தில் மாறுபடுகின்ர ஒரே செலவு. எடுத்துக்காட்டு: இனிப்புப் பண்டம் அல்லது சினிமா போன்ற நீங்கள் விரும்புகின்ற ஒன்று அல்லது வாகனத்தை சரிபார்ப்பது போன்ற அவசர கால தேவை.



பாடம்: வரவு செலவுத்திட்டம் மற்றும் பொருட்கள் வாங்குவது

வரவு செலவுத்திட்டம் என்பதை பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டு இந்த பகுதியை தொடங்குங்கள்.


கலந்துரையாடலின் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் கரும்பலகையில் ஒரு வரைபடம் வரைக.. நடுவில் உள்ள வட்டத்தில் இருந்து தொடங்குங்கள் (வரவு செலவுத்திட்டம்) சுற்றி இருக்கும் வட்டத்தில் நீங்கள் கலந்துரையாடும் பிற கருத்துகளையும், எண்ணங்களையும் எழுதுக.


Pic 017

கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களை சேர்த்து கொள்ளுங்கள்:

  • வரவு செலவுத்திட்டத்தை பின்பற்றுவது ஏன் புத்திசாலித்தனம்?
  • வரவு செலவுத்திட்டத்தில் நீங்கள் எந்த பொருட்களை சேர்த்து கொள்ளலாம்?
  • நிலையான செலவு என்றால் என்ன?
  • மாறுபடும் செலவு என்றால் என்ன?
  • உங்கள் வரவு செலவுத்திட்டத்தை எப்படி சிக்கனமாக வைதுக்கொல்ல்வது?


விளையாட்டு: வரவு செலவுத்திட்டம் இடுதல் மற்றும் பொருட்கள் வாங்குதல்


குறிக்கோள்:

வாழ்வதற்கான விலை, செலவுகள்,வரவு மற்றும் வரவு செலவுத்திட்டம் இடுவதற்கு தேவையான மற்றவைகளை மாணவர்களை தெரிந்து கொள்ள வைப்பது. இந்த பயிற்சியை மாணவர்கள் முடித்த பின்னர் வெவ்வேறான வயது உடையவர்களின் வரவு செலவுத்திட்டத்தை அவர்களை கணக்கிட சொல்லுங்கள்.